லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரையில் ஆங்கர், நடிகர் என கலக்கி வந்தவர் ரியோ ராஜ். 'சரவணன் மீனாட்சி' தொடரில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த பாராட்டுகளை பெறவே தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அதன்பலனாக 2017ம் ஆண்டில் 'சத்ரியன்' படத்தின் மூலம் முதல்முறையாக சினிமாவிலும் என்ட்ரியானார். இதனை தொடர்ந்து 2 படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ரியோ ராஜூக்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' திரைப்படம் மட்டுமே சுமாரான ஹிட் படமாக அமைந்தது. தற்போது ரியோ ராஜ் புதிய படமொன்றில் மீண்டும் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கும் படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக தலைமுடியை நீளமாக வளர்த்து கெட்டப் சேஞ்ச் செய்துள்ளார். படத்தில் ரியோவுக்கு ஜோடியாக கன்னட நடிகை பவ்யா த்ரிகா நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் பிரபல தமிழ் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு கிளாப் போர்டு அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளார்.