சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது | கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி |

ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே. இதனை கோமாளி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இரண்டாவது படத்திலேயே நடிக்க வந்தது ஏன்? என்பது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:
நான் நடிப்பது ஒன்றும் புதியதல்ல. நான் இயக்கிய குறும்படங்களை நானே இயக்கி நடித்திருக்கிறேன். அப்படி 6 வருடங்களுக்கு முன்பு நான் இயக்கிய குறும்படம் தான் லவ் டுடே. அதில் நான் நடித்திருந்தேன். அந்த குறும்படத்தை தற்போது பெரிய படமாக உருவாக்கி இருக்கிறேன். லவ்டுடே கதையின் நான் நடிக்க வேண்டும் என்று எனக்காக எழுதிய கதை. அதனால் நான் நடிக்கிறேன்.
கோமாளி படத்திற்கு முன்பே முதல் படமாக இந்த படத்தை இயக்கி நடிக்க வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் புதுமுகம் என்பதால் எல்லோரும் தயங்கினார்கள். அதனால் பெரிய ஹீரோவை வைத்து ஒரு படம் பண்ணி அதை வெற்றிப் படமாக்கி காட்டிவிட்டு இந்த படத்தை இயக்க முடிவு செய்தேன். தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமும் கதையை கேட்டுவிட்டு நாங்களே தயாரிக்கிறோம் என்று முன்வந்தார்கள். இப்படித்தான் நடிக்க வந்தேன். இனி வரும் காலங்களில் நடிப்பு, இயக்கம் இரண்டையும் செய்வேன். மற்ற இயக்குனர்கள் படத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.