துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'துணிவு'. உண்மையை சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது .மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார் .
இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளாராம். போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார். விரைவில் இந்த பணிகள் நிறைவுபெறும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் ஒன்றை அனிரூத் பாடியுள்ளார். விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.