பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு 36 வயதினிலே என்கிற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா, தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து செலக்டிவ் ஆக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக 'காதல் : தி கோர்' என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி துவக்க விழா பூஜையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கியது. இந்தநிலையில் ஜோதிகா தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி என்பவர் இயக்குகிறார். இவர் கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பைப் பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் என்கிற படத்தை இயக்கியவர்.. இவர் சொன்ன கதை பிடித்துப் போய், தானே தயாரிக்க முன்வந்ததுடன் கதாநாயகியாக நடிக்க ஜோதிகா தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை சிபாரிசு செய்ததும் படத்தின் ஹீரோ மம்முட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது.