ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியர் கடந்த ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக கடந்த அக்., 9ல் விக்னேஷ் சிவன் அறிவித்தார். நான்கே மாதங்களில் குழந்தையா என பலரும் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பிய நிலையில் அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விபரம் தெரிய வந்தது.
அதேசமயம் இவர்கள் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றதாக சர்ச்சையும் எழுந்தது. இதையடுத்து இதுபற்றி விசாரிக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்ததாகவும், கடந்த டிசம்பரிலேயே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விண்ணப்பித்ததாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், வாடகைதாய் விவகாரம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். ஓரிரு நாளில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.