Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காந்தாரா' பாடல் காப்பி அடிக்கப்பட்டதா?, புது சர்ச்சை

25 அக், 2022 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Is-Kantara-song-copied

ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் கன்னடத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'காந்தாரா'. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'வராஹ ரூபம்' என்ற பாடல் பலரையும் மெய்மறக்கச் செய்துள்ளது.

ஆனால், அந்தப் பாடல் தங்களது 'நவரசம்' ஆல்பத்தின் 'தவிர்க்க முடியாத ஒற்றுமை' ஆக இருப்பதாக அந்த 'நவரசம்' ஆல்பத்தை உருவாக்கிய 'தாய்க்குடம் பிரிட்ஜ்' என்ற மலையாள இசைக் குழு தெரிவித்துள்ளது. அது பற்றிய அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவில், 'நவரசம் மற்றும் வராஹ ரூபம்' பாடல் போஸ்டர்களைப் பகிர்ந்து, “தாய்க்குடம் பிரிட்ஜ் எந்த வகையிலும் 'காந்தாரா' படத்துடன் இணைந்து இருக்கவில்லை என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறோம். எங்களது 'நவசரம்' மற்றும் 'வராஹ ரூபம்' பாடல்களுக்கு இடையில் தவிர்க்க முடியாத ஒற்றுமைகள் இருக்கிறது. இசை ஒலியைப் பொறுத்தவரையில் இது பதிப்புரிமைச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும்.

'ஈர்க்கப்பட்டது' மற்றும் 'திருட்டு' ஆகியவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடு மெல்லிய ஒன்றுதான் என்பது எங்கள் நிலைப்பாடு. அதனால், இதற்கு அந்தப் பாடலின் கிரியேட்டிவ் டீம் தான் பொறுப்பு என நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். அந்தப் பாடலின் மீது எங்களுக்கு உண்டான அங்கீகாரத்தை கொடுக்காமல், படக்குழுவின் கிரியேட்டிவ் டீம் அந்தப் பாடலை உருவாக்கியது போல சொல்லிக் கொள்கிறார்கள்.

எங்கள் பாடல்களைக் கேட்போர்களின் ஆதரவையும், இது பற்றி பரவச் செய்யவும் கேட்டுக் கொள்கிறோம். எங்களது சக கலைஞர்களையும், இசை காப்புரிமையைக் காப்பாற்ற கருத்து சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்கள்.

தாய்க்குடம் பிரிட்ஜ் உருவாக்கிய 'நவரசம்' பாடல் மற்றும், 'காந்தாரா' படத்தின் 'வராஹ ரூபம்' பாடல் லின்க் ஆகியவை கீழே....

நவரசம் :
https://www.youtube.com/watch?v=oYK6JU7Nx38

காந்தாரா : https://www.youtube.com/watch?v=gH_RYRwVrVM

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'லைகர்' தோல்வி பஞ்சாயத்து : வீட்டை முற்றுகையிடும் போராட்டம்'லைகர்' தோல்வி பஞ்சாயத்து : வீட்டை ... நயன்தாரா, வாடகைத் தாய் விவகாரம் : ஓரிரு நாளில் அறிக்கை நயன்தாரா, வாடகைத் தாய் விவகாரம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

26 அக், 2022 - 07:37 Report Abuse
kk.Narayanan KK Both are culturally same. Especially the coastal areas of Kasargod and Kannur culturally linked with coastal areas of Karanataka...For eg. what Mangalorean called boothakola has similarity with Theyyam forms of Kannur. Even the food has similarity.Hence we cannot say it is copied.
Rate this:
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
25 அக், 2022 - 15:08 Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan இரண்டு விடியோவையும் பார்த்தேன். இசையில் ஒற்றுமை தெரிகிறது. ஆனால் மனதில் தோன்றியதோ வேறு. தமிழில் இப்படிபட்ட படங்கள் வராதா, நம் முன்னோர்களின் வாழ்கைப் பாடங்களை நாம் கற்றுக்கொள்வோமா அல்லது அழித்து, அழிந்து போவோமா என்ற எண்ணம், ஏக்கம், தாக்கம், தாகம்... ஏற்பட்டு கவலை கொள்ளச் செய்கிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in