சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

பீஸ்ட் படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் படம் ‛வாரிசு'. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். சரத்குமார், பிரபு, சம்யுக்தா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரமாண்டமாய் இரு மொழிகளில் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்த படம் துவங்கியபோதே பொங்கல் ரிலீஸ் என்று சொல்லி தான் அறிவித்தார்கள். அதன்படி தற்போது தீபாவளி தினத்தில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு உலகம் முழுக்க பொங்கலுக்கு வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரில் விஜய், கையில் பெரிய சுத்தியல் உடன் எதிரிகளை துவம்சம் செய்துவிட்டு ஆக்ரோஷமாக நடந்து வருவது போன்று வடிவமைத்துள்ளனர். இதை வரவேற்றுள்ள விஜய் ரசிகர்கள் வாரிசு பொங்கல் என்ற பெயரில் டிரெண்ட் செய்தனர்.
பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்தின் துணிவு படமும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.