பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு |

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வரும் விஷால், ஆந்திரா மாநிலத்தில் உள்ள கடப்பாவில் அமைந்திருக்கும் அமீன் பீர் தர்காவிற்கு சென்று வழிபாடு நடத்தி இருக்கிறார். அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ‛கடப்பாவிற்கு பலமுறை படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன். அப்போது எல்லாம் இந்த அமீன் பீர் தர்காவிற்கு வர வேண்டுமென்று நினைப்பேன். படப்பிடிப்பு காரணமாக வரமுடியாத சூழல் ஏற்பட்டது. என்றாலும் இப்போது இந்த தர்காவிற்கு வந்து பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
மேலும் என்னை பொறுத்தவரை அல்லாஹ், வெங்கடேஸ்வரா சாமி , இயேசு எல்லோரும் ஒன்று தான். மதம் என்ற ரீதியில் பிரிவினை கிடையாது. அனைத்து மத கடவுள்களையும் மதிக்கக் கூடியவன் நான்‛ என்று தெரிவித்திருக்கும் விஷால், ‛100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தால் அவர்கள் அரசியலுக்கு வந்து விட்டதாக அர்த்தம். அந்த வகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்' என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகர் விஷால்.