டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் புஷ்பா. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படம் 350 கோடி வரை வசூல் செய்தது. இதில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனமாடி இருந்தார் . அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா - தி ரூல் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்தில் நடனம் ஆடிய சமந்தாவுக்கு படக்குழு அழைப்பு விடுத்தது. ஆனால் மீண்டும் சிங்கிள் பாடலுக்கு நடனமாட அவர் மறுத்துவிட்டார். அதையடுத்து தற்போது சமந்தா நடித்த வேடத்திற்கு தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறார். முதல் பக்கத்தில் சமந்தா நடனமாடிய பாடலை விடவும் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் பாடலில் கவர்ச்சியான உடையணிந்து தமன்னா நடனமாட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.




