3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த விருது விழாவில் அயல்நாட்டு படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வானது. இந்த படம் சினிமா பிலிமில் மோகம் கொண்டு அதன் கனவில் மிதக்கும் ஒரு சிறுவனை பற்றிய கதை. இதில் நடித்த சிறுவர்களில் ராகுல் கோலியும் ஒருவர்.
நாளை மறுநாள் (14ம் தேதி) இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நடித்த 15 வயது ராகுல் கோலி புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்தார். ராகுலின் மரணம் குறித்து அவனது தந்தை கூறியிருப்பதாவது:
அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். படம் வெளியான பிறகு எங்கள் வாழ்க்கை மாறும் என்று அடிக்கடி என்னிடம் கூறிக்கொண்டே இருப்பான். ஆனால் அதற்கு முன்னரே அவன் எங்களை விட்டுப் பிரிந்து விட்டான். ராகுலின் சிகிச்சைக்காக என்னுடைய ஆட்டோவை விற்க இருந்தேன். ஆனால் நிலைமையை அறிந்த செல்லோ ஷோ படக்குழுவினர் எனக்கு உதவி செய்தனர்.
ராகுலை காப்பாற்ற செல்லோ படக்குழுனர் தொடர்ந்து முயற்சித்துள்ளனர். பண உதவியில் இருந்து அனைத்து உதவிகளும் செய்து வந்தனர். ஆனால் அது பலனளிக்காமல் போனது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.