ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடிக்கிறார் விஜய். வம்சி இயக்கி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இம்மாதம் 27ம் தேதியோடு வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. அதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்குகின்றன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஒரு வார காலம் வெளிநாடு சென்று ஓய்வு எடுக்கப் போகிறார் விஜய். அதன்பிறகு அவர் சென்னை திரும்பியதும் உடனடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனது 67வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார். இதனால் தற்போது அப்படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும் விஜய் 67 வது படத்தில் அவருடன் ஆறு வில்லன்கள் மோதப் போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.