சிவகார்த்திகேயன் சம்பளம் அதிரடி உயர்வு ? | சினிமா விருது தேர்வு நடந்து வருகிறது : சென்னை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் அமைச்சர் தகவல் | தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் | பிளாஷ்பேக்: 80 வருடங்களுக்கு முன்பே வரதட்சனை மாப்பிள்ளைகளை வேட்டையாடிய ஹீரோயின் | பிளாஷ்பேக் : லட்சுமி பிறந்தநாள் - தலைமுறைகளை தாண்டிய நடிகை | ‛புஷ்பா 2' ; கூட்ட நெரிசலில் பெண் பலி : நடிகர் அல்லு அர்ஜுன் கைது | 100வது நாளில் 'தி கோட்' | 'புஷ்பா 2' வரவேற்பு : ராஜமவுலியை மிஞ்சினாரா சுகுமார்? | நேத்ரன் மறைவுக்கு பின் தீபா வெளியிட்ட பதிவு | பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின் அர்னவின் சீரியல் என்ட்ரி |
பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா. பெங்களூரை சேர்ந்த இவர் கேளடி கண்மணி தொடரின் மூலம் அறிமுகமானார். தற்போது செவ்வந்தி தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் செல்லம்மா தொடரில் நடித்தபோது உடன் நடித்த நடிகர் அர்ணவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் திவ்யா நேற்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கர்ப்பிணியான தன்னை கணவன் அடித்து உதைத்தால் காயம் அடைந்ததாக தெரிவித்திருக்கிறார். இதை தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தது. போரூர் மகளிர் காவல் நிலைய போலீசார் திவ்யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், கணவர் தன்னை அடித்ததால் எப்போது வேண்டுமானாலும் தனது கரு கலையலாம் என்றும் பேசி திவ்யா வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: சமீபத்தில் தான் எனக்கும், அர்ணவ்விற்கும் திருமணம் முடிந்தது. அவர் தற்போது 'செல்லம்மா' தொடரில் நடித்து வருகிறார். ஒரே தொடரில் நடித்து வந்த நாங்கள், ஒரே வீட்டில் வசித்து வந்தோம். 2 வருடத்துக்கு முன்பு நாங்கள் ஒரு வீடு வாங்கினோம். அந்த கடனை எல்லாம் நான் தான் கட்டினேன். 'கல்யாணப்பரிசு' தொடருக்கு பிறகு கொரோனா காலத்தில் அர்ணவ்க்கு எந்த ஒரு தொடரும் கைவசம் இல்லை. நான் தான் 'மகராசி' தொடரை முடித்துவிட்டு வங்கி கடனை எல்லாம் கட்டினேன். அர்ணவ் தனியாக வாங்கி இருந்த கடனையும் நான்தான் கட்டினேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் குழந்தையை போல் நான் பார்த்துக்கொண்டேன்.
ஆனால் என் கணவர் என்னை அடித்ததால் நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிற்றில் அடிபட்டது. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்து விட்டேன். தற்போது நான் ஆஸ்பத்திரியில் உள்ளேன். டாக்டர்கள் எப்போது வேண்டுமானாலும் எனது கரு கலையலாம் என கூறுகின்றனர். எனது கணவர் எனக்கு வேண்டும். எனது குழந்தையை காப்பாற்ற வேண்டும். எனக்காக அனைவரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் வீடியோவில் கண்ணீர் மல்க பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் அர்ணவ், “என் மனைவி அவள் கருவை கலைக்க நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிடுகிறார். அவருக்கு ஏற்கெனவே திருமணமானது எனக்கு தெரியும். ஆனால் விவாகரத்து செய்து விட்டதாக என்னிடம் பொய் சொல்லி என்னை திருமணம் செய்து கொண்டார்” என்று ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இரு புகார்களையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.