இந்தாண்டு ஹிட் படமெல்லாம்... முதல் படத்தில் ஜெயித்த இயக்குனர்கள் | ராதிகா பாலிசியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா? | 10வது படத்திலும் புது இயக்குனரை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன் | மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் முனீஷ்காந்த் | 'கடல் கன்னி' ஆண்ட்ரியா | சமூக வலைதளத்தில் ஆபாச பதிவுகள்: லாவண்யா திரிபாதி போலீசில் புகார் | பிளாஷ்பேக்: தன் படத்தை பார்க்க விரும்பாத விஜயகாந்த் | பிளாஷ்பேக்: தமிழில் படமான உலக சினிமா | 'ஜனநாயகன்' ஓடிடி உரிமை ஒப்பந்தம் ரத்து? | அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் 'எஎ22 - எ6' பட டீசர் ? |

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக ‛லவ் டுடே' படத்தை இயக்கி அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‛நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இளம் காதலர்களான பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானா ஆகியோருக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக வைத்து லவ் டுடே திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காதல் மற்றும் 2கே கிட்ஸ் தலைமுறையினர் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் டிரைலரை நடிகர் சிம்பு நேற்று (அக்.,5) வெளியிட்டார். இந்த டிரைலர் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் நவம்பர் 4 அன்று உலகெங்கும் தியேட்டரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.




