Advertisement

சிறப்புச்செய்திகள்

‛‛சத்தம் பத்தாது விசில்போடு'': விஜய் குரலில் ‛கோட்' பாடல் வெளியீடு | லாரன்ஸின் 25வது படமாக ஹன்டர்! | நீதிமன்றத்தில் கூட எனது பிரைவசிக்கு பாதுகாப்பு இல்லை ; பாவனா விரக்தி | ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய ராய் லட்சுமி | முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் போல ஒரு கதையை என்னால் யோசிக்க முடியாது: வினீத் சீனிவாசன் | என்னோட லிமிட் அதிகபட்சம் எட்டு மாசம் தான் : பஹத் பாசில் | நெட்டிசனின் மோசமான கேள்வி- கூலாக பதில் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா! | தனுஷின் ‛ராயன்' படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த இசையமைப்பாளர் தேவா! | தமிழ் புத்தாண்டில் வெளியான ‛இந்தியன்-2' படத்தின் போஸ்டர்! | மீண்டும் நிவின்பாலிக்கு ஜோடியாகும் நயன்தாரா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா

06 அக், 2022 - 13:02 IST
எழுத்தின் அளவு:
DMK-MP-Trichy-Siva-shares-his-opinion-of-Ponniyin-Selvan-Movie

கல்கியின் பொன்னியின் செல்வன் மணிரத்னத்தில் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு தரப்பினர் படம் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனமும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திமுக எம்.பி திருச்சி சிவா பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும் என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: கல்லூரி படிப்பின்போதும், ஓராண்டு கால மிசா சிறைவாசத்தின்போதும் படித்த நூல் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'. முதல்முறை படித்து முடித்த பின் அதில் வரும் பாத்திரங்கள் நெஞ்சில் நிழலாட உறக்கம் தொலைத்த இரவுகளைப் போலவே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்த அன்றும் இரவு உறக்கம் இழந்தேன். இதற்கு மேல் இத்தனை பெரிய வரலாற்றுப் புதினத்தை திரையில் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்க இயலாது.

எம்.ஜி.ஆர் நினைத்து, கமல்ஹாசன் விரும்பி பல காரணங்களால் உருவாக முடியாத இந்தக் காவியத்தை திரைப்படமாக்கிய மணிரத்னத்தை பாராட்டுவதை ஒரு தமிழனின் கடமையாய் உணர்கிறேன். நூறு சதவீதம் முழுமை என்பதை எல்லாவற்றிலும் எதிர்பார்க்க முடியாது. எனக்கு தெரிந்து எழுத்து வடிவத்தில் பெரும் வரவேற்பினை பெற்ற பல கதைகள் திரையில் வெற்றி பெறாமல் போயிருக்கின்றன. அகிலன், ஜெயகாந்தன், சுஜாதா, ஏன் கல்கியும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. விமர்சனங்களை சந்திக்காத தலைவர்களும், படைப்புகளும் இருக்கவே முடியாது. ஆனால் பாராட்ட வேண்டியதை பாராட்டாமல் குறைகளை மட்டுமே சுட்டுவதை ஏற்கவும் இயலாது.

திரையில் வந்தியத்தேவனின், குறும்புத்தனம், திறமை, வீரம், காதல், சாமர்த்தியம் அத்தனையையும் நடிகர் கார்த்தி வெளிப்படுத்தியிருப்பது முதல் மகிழ்ச்சி. பின்னாளில் சக்கரவர்த்தியாய் பரிணமிக்க இருக்கும் இலக்கணக்கங்களை கொண்ட இந்நாள் இளவரசனாய் அருள்மொழிவர்மன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஜெயம் ரவியிடம் இத்தனை எதிர்பார்க்கவில்லை. 'கல்கி' வெளிப்படுத்திய அத்தனை இலக்கணங்களையும் அடக்கமாக வெளிப்படுத்தும் நடிப்பு.

ஹெலன் ஆப் ட்ராயாய் போல், கிளியோபாட்ராவை போல் மனம் மயக்கும் நந்தினியைப் போல் என்றாவது ஒருநாள் யதார்த்தத்தில் யாரையாவது காண இயலுமா என்று மனம் ஏங்கியதுண்டு. அத்தகைய நந்தினியாக உலக அழகி ஐஸ்வர்யா ராயை கண்ணெதிரே கொண்டு நிறுத்திய மணிரத்னத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

குந்தவையாய் த்ரிஷா, பெரிய பழுவேட்டரராய் சரத்குமார், சின்ன பழுவேட்டராய் பார்த்திபன், சுந்தர சோழராய் பிரகாஷ்ராஜ், ஆழ்வார்க்கடியானாக ஜெயராம், ஆதித்த கரிகாலனாய் விக்ரம் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறைகாணும் குணத்துடன் படத்தைப் பார்க்காத காரணத்தால் ஏமாற்றமடையவில்லை. பல பேரின் பலநாள் ஏக்கத்தினைப் போக்க முன்வந்து அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றிருக்கும் இயக்குநர் மணிரத்தினத்தை என் உணர்வு கொண்டோரின் சார்பாக பாராட்ட விரும்புகிறேன்.

படம் பார்த்து நெருக்கமான சிலரோடு பகிர்ந்து கொள்வதோடு நிறுத்தமால் இதை எழுத நேர்ந்ததற்குக் காரணம், பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் சில எதிர்மறை விமர்சனங்களை படிக்க நேர்ந்ததால்தான். கட்டிய வீட்டிற்கு குற்றம் சொல்ல ஆட்களுக்கா பஞ்சம்? எங்கள் கொள்கைகளுக்கு முரண்படும் எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களை இந்தப் படத்தில் நான் ரசித்தேன்.

கலைப் படைப்பினில் தனிமனித விருப்பு வெறுப்புகளைக் கொண்டு பார்வையிடுவது ஏற்புடைய குணமல்ல என்பதை உணர்ந்தவன் நான். மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்தப் படைப்பின் சிறப்புகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு விமர்சனங்கள் வைக்கப்படுவதை பார்க்க நேர்ந்தது. காந்தியையும், அண்ணாவையுமே விமர்சித்த உலகம் இது. எனவே இதில் விசித்திரம் ஏதுமில்லை.

சிலர் கைவிட்ட முயற்சியினை, பலர் முயல முன்வராத இந்தப் பெரும் படைப்பிற்கான முனைப்பிற்கும், உழைப்பிற்கும், வெளிச்சத்திற்கு வராத தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைக்கும் பாராட்டாமல் இருப்பதை குற்றமாய் உணர்கிறேன். இதற்கும் விமர்சனம் வரக்கூடும். அதையும் உணர்ந்தே இந்தப் பதிவு. இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பர்ஹானா ஆனார் ஐஸ்வர்யா ராஜேஷ்பர்ஹானா ஆனார் ஐஸ்வர்யா ராஜேஷ் வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா
12 அக், 2022 - 17:30 Report Abuse
Radhakrishnan Seetharaman மொத்தத்துல இவனுக பூரா பெரும் தூக்கமில்லாமத் தான் திரியிறாய்ங்க போல 😂
Rate this:
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
07 அக், 2022 - 11:38 Report Abuse
M.COM.N.K.K. பொன்னியின் செல்வனை திரைப்படமாக வந்தது மகிழ்சியே யாரும் சர்ச்சை கருத்துக்களை சொன்னால் அது தவறுதான் முயற்சி செய்து படத்தை எடுத்ததற்கு எல்லோரும் பாராட்டுகிறோம். அதில் நடித்தவர்கள் அனைவரையும் பாராட்டுகிறோம் மிக்க மகிழ்ச்சி. அதே நேரத்தில் நாங்கள் விரும்பியது என்னவென்றால் பொன்னியின் செல்வன் கதையை மக்கள் திலகம் நடிகர்திலகம் காதல் மன்னன் எம்.என்.நபியார் பி.எஸ்.வீரப்பா அசோகன் ஆர்.எஸ்.மனோகர் ஜெய்சங்கர் சிவகுமார் சாண்டோ சின்னப்ப தேவர் ஒ ஏ கே தேவர் எ.பி.நாகராஜன் நாகையா டி .எஸ் .பாலையா நாகேஷ் தங்கவேலு சோ சந்திரபாபு பத்மினி பானுமதி சரோஜாதேவி சாவித்ரி தேவிகா மற்றும் இன்னும் பலர் இவர்கள் எல்லாம் நடித்திருந்தால் படம் எப்படி இருக்கும் அதைத்தான் நாங்கள் கற்பனை செய்தோமே தவிர யாரையும் குறை சொல்லவில்லை யாரும் குறை சொல்லியிருந்தால் அது தவறுதான் விமர்சனங்களை நாம் காதில் போட்டுக்கொள்ளவேண்டியதே இல்லை.பழைய நடிகர்கள் அனைவரும் பொன்னியின் செல்வனில் நடித்து இருந்து அதே படத்தை மீண்டும் ரீமேக் செய்திருந்தால் எப்படியிருந்திருக்கும் அதுதான் எங்கள் அனைவரின் ஆசை அது நிறைவேற வில்லை அதுதான் வருத்தமே தவிர மற்றபடி ஏதுமில்லை தற்போது நடித்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பலகோடி.வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
Rate this:
VEERAKANAL - chidambaram,இந்தியா
07 அக், 2022 - 07:15 Report Abuse
VEERAKANAL மிக சிறந்த பதிவு. அனைவுக்குமே விருப்பமான நாகரீகமான அரசியலின் வெளிப்பாடு. அரசியலில் ஈடுபடும் அனைவரும் உங்களை போல பரந்த நோக்கோடு இருப்பதுதான் நன்று.
Rate this:
kijan - Chennai,இந்தியா
07 அக், 2022 - 02:04 Report Abuse
kijan ஆழ்வார்க்கடியான் பாத்திரம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது .... அவரை கோமாளி போன்று காட்டி இருக்கிறார்கள் ...கதைப்படி அவர் யார் என்றே கணிக்க முடியாத ஒரு வீர வைஷ்ணவர் .... அனைத்து பாத்திரங்களையும் இணைப்பவர்கள் ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் தான்.தயவுசெய்து பாத்திரத்தின் உயர்வை சிதைக்காதீர்கள்.
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07 அக், 2022 - 01:36 Report Abuse
Matt P காந்தியையும் அண்ணாவையுமே விமரிசித்த உலகம் என்கிறார். கருணாநிதியையுமே விமரிசித்த உலகம் என்று சொல்ல மனம் வரவில்லை. அப்படி சொல்லியிருந்தால் குற்ற உணர்வுக்கு ஆளாகியிருப்பார்./ சினிமா என்பது பொழுதுபோக்கு. போர் அடிக்காமல் ரசிக்கும்படியா இருக்குதா என்று பாருங்கப்பா.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in