Advertisement

சிறப்புச்செய்திகள்

விடாமுயற்சியில் இளமையான அஜித் : வெளியான போஸ்டர் | ஸ்காட்லாந்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த சனுஷா | ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | டபுள் ஐ ஸ்மார்ட் பாடல் சர்ச்சை : பூரி ஜெகன்நாத் மீது போலீசில் புகார் | பிரச்னையை பக்குவமாக கையாண்ட நடிகருக்கு அமலாபால் பாராட்டு | அம்பானி வீட்டு திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் | இறுதிகட்டத்தை நோக்கி நகரும் தக் லைப் படக்குழு | எல்.ஐ.சி படத்தில் இணைந்த மூன்றாவது ஒளிப்பதிவாளர் | அறிவாளிகள் தேவையில்லை, ஆடியன்ஸ் போதும் - பாபி சிம்ஹா | தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் கன்னட நடிகை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'விக்ரம் வேதா' - பழைய டுவீட் டெலிட் செய்து புதிய டுவீட் போட்ட ஹிருத்திக் ரோஷன்

05 அக், 2022 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Vikram-Vedha-:-Hrithik-Roshan-removed-old-tweet-and-post-new-tweet

தமிழில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'விக்ரம் வேதா' படம் ஹிந்தியில் 'விக்ரம் வேதா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த வாரம் வெளியானது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தியிலும் இயக்கினார்கள். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்தார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தப் படம் வசூலில் பெரிய சாதனையை நிகழ்த்தாமல் சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு 'விக்ரம் வேதா' பற்றி டுவிட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “வேதா ஒரு அற்புதமான பயணம். அவர் மூலம் கற்றுக் கொண்டேன். என் தோல்விகளின் போது அமைதியாக இருக்கிறேன். பயப்படாமல் மற்றும் மன்னிப்பு கேட்காமல். இந்தவாய்ப்பைக் கொடுத்ததற்காக எனது இயக்குனர்கள், எழுத்தாளர்கள் புஷ்கர் காயத்ரி ஆகியோருக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நன்றி வேதா. நான் அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்,” எனப் பதிவிட்டு கையில் கட்டியிருந்த கருப்பு கயிறையும் 'கட்' செய்யும் வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.

ஆனால், அந்த வீடியோவையும், பதிவையும் டெலிட் செய்துவிட்டு புதிய வீடியோ ஒன்றையும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'வேதா' கதாபாத்திரத்திற்காக எப்படியெல்லாம் பயற்சி எடுத்தார் என்பது பதிவாகியுள்ளது. “வேதா, ஒன்றும் இல்லாததிலிருந்து உருவெடுக்கும் ஒரு செயலாக இருந்தது. இன்று நான் பெருமைப்படக் கூடிய ஒரு கதாபாத்திரமாக உள்ளது. பேசுவது, நடப்பது, நடனமாடுவது, சாப்பிடுவது மற்றும் வேதாவாக வாழ்வது என்பதெல்லாம் பெரும் மகிழ்ச்சியாகக் கற்றுக் கொண்டது. வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் இல்லாமல் இருக்கலாம், ஆனால், ஹிருத்திக்கிடம் எப்போதும் வேதா இருப்பான்,” எனப் பெருமையாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டெலிட் செய்த முதல் பதிவிற்கும் அடுத்து பெருமையாகப் பதிவிட்டுள்ள பதிவிற்கும் இடையில் என்ன நடந்தது என்பது ஹிருத்திக்கிற்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பிரம்மாஸ்திரா' - 25 நாட்களில் 425 கோடி வசூல்'பிரம்மாஸ்திரா' - 25 நாட்களில் 425 கோடி ... ராம் சேது : ராமர் பாலத்தை காக்க போராடும் அக்ஷய்குமார் ராம் சேது : ராமர் பாலத்தை காக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in