'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
அக்ஷய் குமார் நடித்துள்ள ஹிந்திப் படம் 'ராம் சேது'. அவருடன் ஜாக்குலின் பெர்ணாண்டஸ், நஷ்ரத், சத்யதேவ், நாசர் நடித்துள்ளனர். அபிஷேக் சர்மா இயக்கி உள்ளர். தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையில் கடலுக்குள் மூழ்கி இருக்கிறது ராமர் பாலம். ராமாயணத்தில் ராமருக்காக தனது வானர படைகளை கொண்டு இந்த பாலத்தை அனுமன் அமைத்ததாக கூறப்படுகிறது. இதனை இந்துக்கள் நம்புகிறார்கள், புனிதமாக கருதுகிறார்கள். ஆனால் இதனை வேறு சிலர் அது கடலுக்குள் இருக்கும் ஒரு மணல்திட்டு தொடர் என்கிறார்கள். இந்த விஷயம் தான் ராம் சேது படத்தின் கதை.
ராமர் பாலத்தை வெறும் மணல் திட்டு என்று தீர்மானித்து அதை உடைத்து கப்பல் போக்குவரத்துக்கு திட்டமிடுகிறார்கள். தொல்பொருள் துறை ஆய்வாளரான அக்ஷய் குமார் அது மணல் திட்டு அல்ல ராமர் பாலம்தான் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து ராமர் பாலத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இதன் கதை. வருகிற தீபாவளி அன்று படம் வெளிவருகிறது. தமிழ் மொழியிலும் வெளியாகிறது. தற்போது இதன் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.