ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்கத் தொடங்கியபோது ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்க முடியாத அளவுக்கு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டிருந்தனர். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் மீதான ரெட்கார்ட் தடை நீக்கப்பட்டது. அதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் வடிவேலு.
லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் நடித்து முடித்துவிட்ட வடிவேலு தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெறும் நிலையில் வருகிற நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு தியேட்டர் ரிலீஸ்க்கு பிறகு இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.