'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த பகையை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அப்படம் வெளியானபோது பெரிதாக ஓடவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல அனைவரும் ஆயிரத்தில் ஒருவனை கொண்டாடிவருகின்றனர். இதனால் அப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க செல்வராகவன் ஆயத்தமாகி வருகிறார்.
ஆயிரத்தில் ஒருவனில் பார்த்திபன் ஏற்று நடித்திருந்த சோழ மன்னர் கதாபாத்திரத்தில், இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில் நானே வருவேன் படத்தை தனுஷை வைத்து இயக்கியிருந்த செல்வராகவன், சமீபத்தில் அளித்த பேட்டியில், ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்த தகவலை தெரிவித்தார்.
செல்வராகவனிடம் நெறியாளர், ‛ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானபோது நாங்கள் கொண்டாடவில்லை அது எங்கள் தவறுதான். ஆனால் தற்போது கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம். இதை பார்க்கும்போது ஒரு படைப்பாளியாக உங்களுக்கு என்ன தோன்றுகிறது' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த செல்வராகவன், ‛ஒரு படைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காதபோது நிச்சயம் அது வருத்தத்தை கொடுக்கும். அப்படித்தான் ஆயிரத்தில் ஒருவனும். அந்தப் படம் வந்திருந்தபோதே கொண்டாடப்பட்டிருந்தால் நிச்சயம் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள் என சென்றிருக்கும்' என்றார்.