அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' டேலண்ட் ஷோவில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக கலந்து கொண்டு பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானவர் நவீன். தற்போது விஜய் டிவியின் 'பாவம் கணேசன்' சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். மக்கள் மத்தியில் நடிகராகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நவீன், முதல் மனைவி விவகாரத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று சிக்கலை சந்தித்தார். அதன்பிறகு மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் இந்த ஜோடியை பலரும் பாலோ செய்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நவீனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வந்த கிருஷ்ணகுமாரி, 'எங்கள் திருமணத்திற்கு பிறகு பலரும் எங்களுக்கு குழந்தை பிறக்காது என்று சாபம் விட்டனர். நாங்கள் பிரிந்துவிடுவோம் என்றனர். சாபம் விட்ட அனைவருக்கும் நன்றி! நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்' என எமோஷனலாக பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து நவீன் - கிருஷ்ணகுமாரி ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள கிருஷ்ணகுமாரி தன் மகளை பார்த்து, 'உன் பிஞ்சு பாதங்களை பார்ப்பது அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை உன்னை நேசிப்போம்' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து நவீன் - கிருஷ்ணகுமாரி ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.