ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? |
பாலிவுட் இயக்குனர்களில் மதூர் பண்டார்கரும் குறிப்பிடத்தக்க படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளவர். தற்போது தமன்னா நடிப்பில் பப்ளி பவுன்சர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் தமன்னா லேடி பவுன்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் இந்தப்படம் வெளியானது.
இந்தநிலையில் மதுர் பண்டார்கர் இயக்கத்தில் கடந்த 2001ல் சாந்தினி பார் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தபு கதாநாயகியாகவும் அதுல் குல்கர்னி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படம் வெளியாகி 21 ஆண்டுகளை தொட்டுள்ளது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் தனது நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் மதூர் பண்டார்கர். இந்த படத்தில் நடித்த இந்த தபுவுக்கும் அதுல் குல்கர்னிக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.