மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்கில் வெளியான உப்பென்னா படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி. அதன்பிறகு சியாம் சிங்கா ராய், பங்கார் ராஜூ, தமிழ், தெலுங்கில் வெளியான தி வாரியர் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்திலும் நடிக்கிறார்.
கிரித்தி ஷெட்டி சமீபத்தில் தான் சினிமாவுக்கு வந்த ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடினார். இதை முன்னிட்டு அவர் நிஷ்னா என்ற பெயரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛ஓராண்டு சினிமா பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு காரணமாக இருந்த அனைருக்கும் எனது நன்றி. எனது வாழ்க்கை பயணத்தில் புதிய அங்கமாக 'நிஷ்னா' என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறேன். நிஷ்னா என்பது எனது பெற்றோர்களின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்ட சொல். இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் என்னால் இயன்ற உதவிகளை எனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் செய்ய இருக்கிறேன். இதற்கு உங்களின் வழிகாட்டுதலும், ஆதரவும் வேண்டும்'' என்கிறார்.




