ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். ஆண்ட்ரியா அடிப்படையில் ஒரு பாடகி, மேற்கத்திய இசையை முறைப்படி கற்றவர். சினிமாவில் மட்டுமல்ல ஏராளமான ஆல்பங்களிலும் பாடி உள்ளார்.
ஆல்பங்களில் இவர் பாடியுள்ள பாடல்களில் சிறந்தவற்றை தொகுத்து 'ஈக்குவல் இண்டியா' என்ற பெயரில் ப்ளே லிஸ்ட்டை உருவாக்கியுள்ளது பிரபல இசை அப்ளிகேஷன் நிறுவனமன ஸ்பாட்டிபை.
இந்த ஆல்பத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் நியூயார்க் டைம் ஸ்கொயர் கட்டடத்தில் ஆன்ட்ரியாவி்ன் புகைப்படத்துடன் ஆல்பத்தின் விளம்பரத்தை இடம்பெற செய்துள்ளது. இந்த படத்தை வெளியிட்டுள்ள ஆண்ட்ரியா "பாரம்பரியமான இடத்தில் எனது புகைப்படம் இடம் பெற்றிருப்பதை காணும்போது என்னை ராணி போல் உணர்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.