'கங்குவா' பட வழக்கு முடிவு : படம் திட்டமிட்டபடி வரும்... | தமிழில் அறிமுகமாகும் கயாடு லோஹர் | நவ.29ம் தேதி திரைக்கு வரும் சித்தார்த்தின் ‛மிஸ் யூ' | மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் - பிரபாஸ் புதிய கூட்டணி? | ''சினிமா தொழில் 'ரிஸ்க்'; 3 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிந்துவிடும்'': வருண் தேஜ் | பிரபாஸ், ஹோம்பாலே கூட்டணியில் மூன்று படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'அமரன்' இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ் | மணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் | ஒரே நாளில் மோதிக் கொள்ளும் சூர்யா - தனுஷ் |
ஆனந்தம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். 555, தில்லாலங்கடி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் கண்ணீர்விட்டு அழுதபடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது:
கடந்த 11ம் தேதி எனக்கு 5 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி என் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதனுடன் ஒரு வந்த லிங்கை தொட்ட உடன் ஆப் பதிவிறக்கம் ஆனது. அதிலிருந்து என் மொபைல் ஹேக் ஆனது. அதன்பின் 3 நாட்கள் கழித்து மர்மநபர்கள் எனக்கு போன் செய்து, 'நீங்கள் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளீர்கள் அதை திரும்ப செலுத்துங்கள்'என கூறி குறுஞ்செய்தி செய்தி அனுப்பினார்கள். இதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதன்பிறகு வெவ்வேறு வெளிநாட்டு நம்பர்களில் இருந்து மர்ம நபர்கள் பேசினார்கள். பணத்தை கட்டாவிட்டால் புகைப்படங்களை மார்பிங் செய்து வைரலாக்கி விடுவோம் என மிரட்டினர். எனது போனை ஹேக் செய்து அதிலிருந்து என் நண்பர்களின் நம்பர்களை எடுத்து மார்பிங் செய்யப்பட்ட என் படங்களை அனுப்பினார்கள். எனது அப்பா அம்மாவுக்கே அந்த படங்களை அனுப்பினார்கள். நான் எப்படிப்பட்டவள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தயவு செய்து லோன், பரிசு என்ற பெயரில் வரும் எந்த ஆப்பையும் டவுன் லோட் செய்யாதீ்ர்கள், என்னைப்போன்றே நீங்களும் இதில் மாட்டிக் கொண்டு மன உளைச்சலுக்கு உள்ளாகாதீர்கள். இதுகுறித்து நான் ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறேன்.
இவ்வாறு கண்ணீர் மல்க அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.