ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சோஷியல் மீடியாக்களின் பெருவளர்ச்சி ஒருபுறம் பிரபலங்கள் எதை செய்தாலும் டிரெண்டாக்கி வருகிறது. இந்த செலிபிரேட்டிகளும் இதை வைத்துக்கொண்டு அநியாயத்திற்கு அல்சாட்டியம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சீரியல் வில்லி நடிகை சுப்புலெட்சுமி தன் கணவருடன் எடுத்துக்கொண்ட ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'அழகிய தமிழ் மகள்', 'அன்பே வா' ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சுப்புலெட்சுமி ரங்கன். அண்மையில் இவர் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த போட்டோ, வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில், சுப்புலெட்சுமியின் கணவர் மேலாடை இன்றி சிக்ஸ்பேக் உடலைக் காட்டிக்கொண்டு நிற்க, சுப்புலெட்சுமி சிக்ஸ் பேக் வயிற்றின் மீது முத்தமிடுகிறார். மேலும் இருவரும் உதட்டு முத்தமும் கொடுப்பது மாதிரியான நெருக்கமாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
கணவன் மனைவி அந்தரங்க நெருக்கத்தை வெளிப்படையாக பொதுவெளியில் காட்டலாமா? என பலரும் சுப்புலெட்சுமியை திட்டி தீர்த்து வருகின்றனர்.