தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
காதல் தோல்வி காரணமாக நடிகை தீபா என்பவர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்தவர் பவுலின் ஜெஸிகா எனும் தீபா. சமீபத்தில் வெளியான வாய்தா படத்தில் நாயகியாக நடித்தார். சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முற்கட்ட விசாரணையில் தீபா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் கைகூடாததால் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த நபர் ஒரு தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது. மேலும் இறப்பதற்கு முன் தீபா கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
அதில், ‛‛தான் ஒருவரை உயிருக்கு காதலித்ததாகவும், அந்த காதல் கைகூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளாராம்.
நடிகை தீபா பவுலின் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.