பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? |
கடந்த 7 ஆண்டுகளாக சேரன் சினிமாவில் பெரியளவில் படங்கள் பண்ணவில்லை. கடந்த ஆண்டு ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்தார். இந்த ஆண்டு 'தமிழ்குடிமகன்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இசக்கி கார்வண்ணன் டைரக்டு செய்கிறார். லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
ஸ்ரீபிரியங்கா, லால், வேல.ராமமூர்த்தி, ரவிமரியா, எஸ்.ஏ.சந்திரேசகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். "இது ஒரு மனிதனின் குடியுரிமையை பற்றிய படம். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தும், சமுதாய சமநிலை பற்றியும் இந்தப் படம் பேசும். இதுவரை யாரும் கூறாத, வித்தியாசமான கோணத்தில் படம் இருக்கும்” என்கிறார், இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.