ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா என்கிற படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீவள்ளி என்கிற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வெளியான பிறகு இந்த படத்தில் அவர் சாமி சாமி என்கிற பாடலுக்கு ஆடிய நடனம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பலரையும் ஈர்த்து விட்டது. மேலும் பல மாநிலங்களிலிருந்தும் இந்த பாடலுக்கு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பலரும் நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்த ராஷ்மிகா மந்தனா அணிந்திருந்த சேலை போன்றே தற்போது ஜெய்ப்பூர் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது ஸ்ரீவள்ளி சேலைகள் என்றே அவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வட மாநிலத்தில் ஸ்ரீவள்ளி என்கிற பெயரில் சேலைகள் உருவாகும் அளவுக்கு புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ராஷ்மிகா ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.