நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்பட பலரது நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் விடுதலை. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி கைதியாகவும் தோன்றும் காட்சி இடம்பெற்றது. மேலும் இதுவரை விடுதலை படத்திற்கு 40 கோடி வரை செலவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் இன்னும் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடப் போகிறார்கள். மேலும் இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்காக முதல் முறையாக அவரது இசையில் தனுஷ் ஒரு பாடல் பின்னணி பாடி இருக்கிறார். அவரை தொடர்ந்து ரஜினி, கமல் ஆகிய இருவரும் இணைந்து ஒரு பாடல் பின்னணி பாடி இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது குறித்த தகவலை விரைவில் படக்குழு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக விடுதலை படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.