நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த படம் 3. அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் முதல் பாதியில் இப்போது ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தனுஷின் நண்பராக காமெடி வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது, 11 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டுள்ளார்கள். அப்படி வெளியிடப்பட்ட இந்த படம் 200 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி தெலுங்கில் தான் நேரடியாக நடித்த வாத்தி படம் திரைக்கு வருவதற்கு முன்பே, 11 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் தான் நடித்த திரைப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிலேயே வரவேற்பு ஏற்பட்டிருப்பது தனுஷுக்கு மட்டுமின்றி வாத்தி பட குழுவிற்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.