ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' | ‛மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனருடன் இணையும் விக்ரம் |

வம்சி இயக்கத்தில் விஜய் - ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், ஐதராபாத் என பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காதல், செண்டிமெண்ட், ஆக் ஷன் கலந்த கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் - ராஷ்மிகா மந்தனா நடிக்கும் டூயட் பாடல் காட்சி ஐதராபாத்தில் போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததால் அந்த பாடல் பாணியிலேயே இது வாரிசு படத்தின் டூயட் பாடலும் கம்போஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த பாடல் தான் தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. அதோடு அரபிக் குத்து பாடல் போலவே இந்த பாடலிலும் வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி வருகிறாராம் விஜய்.