தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் |

திருமணத்துக்கு முன்பு வரை பிசியான நடிகையாக நடித்து வந்த அமலாபால் திருமணத்திற்கு பின்பு குறிப்பாக விவாகரத்துக்கு பின்னர் அவரது படங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. நண்பர்களுடன் சுற்றுலா, வடநாட்டு கோவில்களில் ஆன்மிக தேடல் என பர்சனல் வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அமலாபால் சினிமாவில் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கடாவர் என்கிற படத்தை தானே தயாரித்து நடித்தார். அந்த படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் தற்போது தி டீச்சர் என்கிற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அமலாபால்.
ராட்சசி படம் போல ஆசிரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்த படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமலாபால். இதற்கு முன் அவர் ராட்சசன் படத்திலும் டீச்சராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பஹத் பாசில், சாய்பல்லவி நடித்த அதிரன் படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. நடிகர் மோகன்லால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் விவேக் அடுத்ததாக மோகன்லால் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.




