சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மணிரத்னம் இயக்கத்தில் ‛பொன்னியின் செல்வன்' நாவல் அதே பெயரில் படமாக இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாய் உருவாகி உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செப்., 30ல் முதல்பாகம் வெளியாக உள்ளது.
ஏற்கனவே படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் விக்ரம், வந்தியதேவனாக நடிக்கும் கார்த்தி, அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவி, நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய், குந்தவையாக நடிக்கும் திரிஷா உள்ளிட்டோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. தொடர்ந்து டீசர், இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்து செப்., 6ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மேலும் சில நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் அவர்களின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. அந்தவகையில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமியும், வானதியாக சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், செம்பியான் மாதேவியாக ஜெயசித்ரா, மதுராந்தனாக ரகுமானும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.