ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் விஜய்சேதுபதி தமிழை தொடர்ந்து தெலுங்கில் நுழைந்து சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, உப்பென்னா ஆகிய படங்களில் நடித்து அங்கேயும் வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து ஹிந்தியிலும் கால்பதித்து படங்களில் நடித்து வருகிறார். அதேபோல மூன்று வருடங்களுக்கு முன்பு மார்க்கோனி மத்தாய் என்கிற படம் மூலம் மலையாளத்திலும் அடியெடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. ஜெயராம் இன்னொரு கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை ரெஜிஷ் மிதிலா என்பவர் இயக்கியிருந்தார்.
அந்த படம் பெரிய அளவில் போகவில்லை என்றாலும் விஜய்சேதுபதியை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் என்கிற பெயர் அவருக்கு கிடைத்தது. தற்போது அந்த அறிமுகத்தை பயன்படுத்தி தமிழில் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார் ரெஜிஷ் மிதிலா. தமிழில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் யானை முகத்தான் என்கிற படத்தை இயக்குகிறார் ரெஜிஷ் மிதிலா. இந்த படத்தில் ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.