நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

கன்னட நடிகர் என்கிற அடையாளம் இருந்தாலும் பான் இந்தியா நடிகராக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் கிச்சா சுதீப். சமீபத்தில் வெளியான இவரது விக்ராந்த் ரோனா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் டீசன்டான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய கிச்சா சுதீப்புக்கு அவரே எதிர்பார்த்திராத மிகப்பெரிய கவுரவம் ஒன்று மிகப்பெரிய பரிசாக கர்நாடக அரசாங்கத்தின் மூலம் தேடி வந்துள்ளது.
ஆம்.. கர்நாடகாவில் பசுக்களை தத்தெடுத்து பராமரிக்கும் விதமாக புண்ணியகோட்டி தத்து யோஜனா என்ற கர்நாடக அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் சுதீப். கர்நாடகாவில் கோசாலைகளில் இருக்கும் பசுக்களை பராமரிக்க, ஒரு பசுவின் ஒரு வருட பராமரிப்பு செலவு தொகையான 11 ஆயிரம் ரூபாயை செலுத்தி பொதுமக்கள் அவற்றை ஆர்வமுடன் தத்தெடுக்க செய்வதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுதீப்புக்கு இந்த கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.