ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு |

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'திருச்சிற்றம்பலம்'. ஒரு இயல்பான காதல் கதையாக ரசிகர்களின் மனதில் இப்படம் இடம் பிடித்தது. படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக நித்யா மேனனின் கதாபாத்திரமும் நடிப்பும் இருந்தது. அதே சமயம், படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷின் நடிப்பையும் விட்டுவிட முடியாது. அவர்கள் இருவருடைய நடிப்பும் திரையில் பிரமாதமாக இருந்தது.
இப்படத்தைப் பார்த்த இயக்குனர் ஷங்கர் கூறுகையில், “திருச்சிற்றம்பலம், அழகான ஒரு படம். வலிகளைத் தொடர்ந்து வரும் அன்பான தருணங்களில்தான் அழகு இருக்கிறது. நித்யா மேனனின் கதாபாத்திரமும், அவரது சிறப்பான நடிப்பும், இதயத்தை கொள்ளையடிக்கிறது. மித்ரன் ஜவஹர் அற்புதமாக எழுதியுள்ளார். டிஎன்எ, வழக்கம் போல, அவர்களது சிறப்பில்…பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படம் இன்று மூன்றாவது வாரத்தைத் தொட்டுள்ளது. படத்தின் வசூல் 100 கோடியை நெருங்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.