சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து திரைக்கு வந்துள்ள லைகர் படம் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக குறைவான வசூலையே ஈட்டி வருகிறது. கடந்த 25ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் நான்கு நாட்களில் 50 கோடி வசூலை கூட நெருங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதற்காக நேரில் சென்றுள்ளார் விஜய் தேவரகொண்டா.
அப்போது அவரிடத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர், எந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளீர்கள்? என்று ஒரு கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு விஜய் தேவரகொண்டா, ‛தோனியின் பயோபிக் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. ஆனால் அப்படி ஒரு படம் ஏற்கனவே உருவாக்கி விட்டது. அதனால் அடுத்தபடியாக விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார்.