டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா ஆகியோர் நடித்து வசூலில் சாதனை படைத்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. தெலுங்கில் தயாரான இந்தப் படம் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது.
தெலுங்கில் இப்படம் டிவியில் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ஒளிபரப்பானது. டிஆர்பி ரேட்டிங்கில் 19.6 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. இது பெரிய சாதனை அல்ல. இருந்தாலும் மூன்று ஓடிடிக்களில் வெளியாகி உள்ள ஒரு படத்திற்கு டிவி ஒளிபரப்பில் இவ்வளவு ரேட்டிங் கிடைத்திருப்பது ஆச்சரியம்தான்.
தெலுங்கில் டிவி ஒளிபரப்பில் அதிக ரேட்டிங் பிடித்த படங்களில் அல்லு அர்ஜுன் நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' படம் 29.4 ரேட்டிங்கைப் பிடித்து முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் கூட முறியடிக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
மலையாளத்தில் ஒளிபரப்பான 'ஆர்ஆர்ஆர்' படத்தின் டிவி ரேட்டிங் 13.7 பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தெலுங்கிலிருந்து மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு டிவியில் ஒளிபரப்பான படங்களில் 'அலா வைகுந்தபுரம்லோ' பெற்ற 11.1 ரேட்டிங் சாதனையை 'ஆர்ஆர்ஆர்' முறியடித்துள்ளது.




