பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' |

விஜய் டிவி நடிகரான புகழ், குக் வித் கோமாளி என்ற ஒரு ஷோவின் மூலம் உலக அளவில் தமிழ் ரசிகர்களிடம் ரீச்சாகியுள்ளார். இதனையடுத்து தற்போது படங்களிலும் வரிசையாக கமிட்டாகி நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் தான் பென்சி என்ற பெண்ணை காதலித்து வருவதாக நிகழ்ச்சி மேடையிலேயே தெரிவித்த புகழ், விரைவிலேயே இருவருக்கும் திருமணம் என்றும் அறிவித்திருந்தார். அன்று முதல், அவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டாலே ரசிகர்கள் அனைவரும் எப்போது திருமணம் என்று நச்சரித்து வந்தனர்.
இந்நிலையில், பீச்சில் கேஷூவல் டிரெஸ்ஸில் புகழ் கண்ணாடிக்கு அருகில் நிற்க, அந்த கண்ணாடியில் பென்சி கல்யாண உடையில் நிற்கும் புகைப்படத்தை புகழ் வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனிலும் விரைவில் என்றும் மட்டும் குறிப்பிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இருப்பினும், இது நிச்சயம் ப்ரீவெட்டிங் போட்டோஷூட் தான் என உறுதி செய்து கொண்ட ரசிகர்கள் புகழ் மற்றும் பென்சியின் திருமணம் விரைவில் நல்ல முறையில் நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதோடு புகழ் - பென்சி ஜோடிக்கு இப்போதே வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.