செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கொரோனா தாக்கம் வந்த பிறகு இந்தியாவில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி அதிகமாகியது. திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். தியேட்டர்களில் வெளியான படங்களும் நான்கு வார இடைவெளியில் ஓடிடி தளங்களில் வெளியாகின. இதனால், தியேட்டர்களுக்கான ரசிகர்கள் வருகை குறைவடைய ஆரம்பித்தது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் வந்தார்கள். சிறிய பட்ஜெட் படங்கள் திண்டாட ஆரம்பித்தன.
இந்நிலையில் ஓடிடி வெளியீடு உள்ளிட்ட பல விவகாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தெலுங்குத் திரையுலகில் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்தினார்கள். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் காரணமாக தற்போது சில புதிய முடிவுகளை எடுத்துள்ளார்கள்.
அதன்படி, ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பின்பு நான்கு வாரங்களுக்குப் பதிலாக எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களுக்காகவும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்களாம். பேச்சு வார்த்தைகள் முடிவடைந்ததை அடுத்து இன்னும் நான்கைந்து நாட்களில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்களாம்.
தமிழ் சினிமாவில் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி என்ற முறைதான் உள்ளது. தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் மாற்றம் வந்துள்ளதை அடுத்து அது தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்குமா என்பது விரைவில் தெரியும்.