'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ்த் திரையுலகில் இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளராக உள்ளவர் அனிருத். தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தொடர்ந்து தனுஷ் நடித்த 'மாரி, தங்க மகன்' ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த மூன்று படங்களில் '3, மாரி' ஆகிய படங்களின் பாடல்கள்தான் சூப்பர் ஹிட்டாகின. இருந்தாலும் 'டிஎன்எ' காம்போ என ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர்.
இருப்பினும் கடந்த ஏழு வருடங்களாக தனுஷ், அனிருத் கூட்டணியில் எந்தப் படமும் வரவில்லை. இக் கூட்டணியின் நான்காவது படமாக நேற்று வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் அமைந்துள்ளது. அனிருத்தின் இசையில் பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு அனிருத் 'டிஎன்ஏ' என்பதை மட்டும் பதிவு செய்து தனுஷை டேக் செய்து, இருவரும் கட்டிப் பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதை ரி-டுவீட் செய்து தனுஷும் ஹாட்டின் எமோஜியைப் பதிவிட்டுள்ளார்.