விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
இந்திய திருநாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் நாடு முழுக்க களை கட்டி உள்ளது. இதை விமரிசையாக கொண்டாடும் விதமாக நாடு முழுக்க ஆக., 13 முதல் 15 தேதி வரை ஒவ்வொருவரின் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி நாடு முழுக்க பலரும் தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த தங்களின் வீடுகளில் கொடியேற்றி உள்ளனர். திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இல்லங்களில் கொடியேற்றி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டு முன்பு தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதேப்போன்று நடிகர் விஜய்யின் நீலாங்கரை வீடு மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் மக்கள் இயக்கம் அலுவலகத்திலும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதேப்போன்று மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடி ஏற்றி உள்ளனர்.
ஹிந்தி நடிகர் ஆமீர்கான் தனது வீட்டின் பால்கனியில் தேசிய கொடியை பறக்க விட்டுள்ளார். காஷ்மீர் பைல்ஸ் பட புகழ் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரியும் தனது இல்லத்தில் தேசிய கொடியை பறக்க விட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.