ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது |

சூர்யா இயக்கி, தயாரித்திருந்த படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கி இருந்தார். இந்த படத்தில் வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வழிபடும் அக்னி குண்டம், மகாலட்சுமி, மற்றும் வன்னியர்களின் தலைவர்களில் ஒருவரான குருவின் பெயரை இழிவுபடுத்தியும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து வேளச்சேரி போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உடனே நீக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.