அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்பாதர், மலையாளத்தில் பிரித்விராஜுடன் கோல்டு என பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அதேபோல் அவரது 75வது படத்தை ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா இயக்குகிறார். இந்த நிலையில் ரக்ஷா பந்தனை ஒட்டி சகோதரி ஒருவருக்கு கையில் ராக்கி கயிறை கட்டிவிடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் நயன்தாரா. அந்த வீடியோவில் முதலில் அந்த பெண், நயன்தாராவுக்கு ராக்கி கயிறு கட்டிவிட, பதிலுக்கு நயன்தாராவும் அந்த பெண்ணுக்கு ராக்கி கயிறை கையில் கட்டி விடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை தற்போது நயன்தாராவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.