அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
லத்தி படத்தின் ஆக்சன் காட்சிகளில் நடித்தபோது பலமுறை விபத்தில் சிக்கினார் விஷால். இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் மார்க் ஆண்டனி படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுடன் ரீத்து வர்மா, எஸ்.ஜே .சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
சென்னையில் பிரமாண்ட செட் போடப்பட்டு அதில் விஷால், எஸ் .ஜே. சூர்யா மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சண்டை காட்சியில் நடித்தபோது விஷாலின் கால் முட்டியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார் . இதனால் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.