2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. நடுவர்களின் சிறப்பு விருதாக அந்த விருது இருந்தது. இந்த நிலையில் தேசிய விருது குறித்து பார்த்திபன் தனது ஸ்டைலில் கிண்டலாக ஒரு பதிவு போட்டுள்ளார்.
அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா படத்தை பார்த்துவிட்டு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதோடு, ''தேசிய விருதுக்கா? என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால் ''மோடிஜீக்கு ஜே" என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது. தேசிய விருது மீது நம்பிக்கை இல்லாவிட்டால் வாங்கிய விருதை திருப்பிக் கொடுங்கள் என்றும், எதற்கெடுத்தாலும் பிரதமர் பெயரை இழுத்து அவரை அவமானப்படுத்தும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.