விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் |

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனம் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து உள்ளனர்.
முதல்பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி பிரம்மாண்டமான அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களை இயக்குனர் மணிரத்னம் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.




