புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் |
ஹிந்தியில் ஆமீர்கான், கரீனா கபூர் நடித்துள்ள படம் ‛லால் சிங் சத்தா'. ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீ-மேக் இது. இந்த படம் நாளை (ஆக.,11) வெளியாக உள்ளது. ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. இதற்காக நாடு முழுக்க ஆமீர்கான் உள்ளிட்ட படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த படத்தை புறக்கணியுங்கள் என சமூகவலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே டிரெண்ட் ஆனது. காரணம் சில ஆண்டுகளுக்கு முன் ஆமீர்கான் ஒரு பேட்டியில், ‛‛நாட்டில் சகிப்புத்தன்மையின்மை குறைந்து கொண்டே வருகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறலாமா'' என தனது மனைவி கூறியதாக பொதுவெளியில் ஆமீர்கான் கூறினார். இதை குறிப்பிட்டு அவரது படத்தை புறக்கணிக்க சொல்லி இப்போது நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என ஆமீர்கான் வேண்டுகோள் வைத்தார். அதேசமயம், இது ஆமீர்கானால் உருவாக்கப்பட்ட பப்ளிசிட்டி என ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டினார். தொடர்ந்து லால் சிங் சத்தா படத்தை புறக்கணியுங்கள் என சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆன நிலையில் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார் ஆமீர்கான்.
அவர் கூறுகையில், ‛‛எந்த வகையிலும் யாரையாவது நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. லால் சிங் சத்தா படத்தை பார்க்க யாருக்கும் விருப்பம் இல்லையென்றால் அவர்களின் உணர்வுகளுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன்'' என தெரிவித்துள்ளார் ஆமீர்கான்.
ஆமீர்கான் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த பிரச்னையால் தனது படத்திற்கு எந்த பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதால் இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.