இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்குத் திரையுலகில் தற்போது ஸ்டிரைக் நடந்து வருவதால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அவர் இயக்க ஆரம்பித்து பாதியில் நின்று போன 'இந்தியன் 2' படத்திற்கான திட்டமிடல் வேலைகளில் தற்போது இறங்கியுள்ளாராம். தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். இருப்பினும் செப்டம்பர் மாதத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பை நடத்தும்படி கமல்ஹாசன் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம்.
லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்துள்ளது. அதனால் படப்பிடிப்பை மேலும் தள்ளி வைக்க ஷங்கருக்கு வாய்ப்பில்லை. தற்போது படத்தில் சில மாற்றங்களையும் செய்துள்ளாராம் ஷங்கர். புதிதாக நடிகர் சத்யராஜும் படத்தில் இணைகிறாராம். அவருக்காக புதிய கதாபாத்திரம் ஒன்றை படத்தில் உருவாக்கியிருக்கிறார்களாம். இன்னொரு பக்கம் 80களின் முன்னணி கதாநாயகனான கார்த்திக்கும் படத்தில் இணையப் போகிறார் என்கிறார்கள்.
படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் போது புதிதாக இணைந்துள்ள நடிகர்கள் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.