சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு | தமிழ் ராக்கர்ஸ் : கலை உலகின் வலியை சொல்லும் தொடர்: அறிவழகன் | வெளியானது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 புரோமோ, தமிழில் எப்போது ? | பட்டதெல்லாம் போதும், இனி படம் தயாரிக்க மாட்டேன்: அமலாபால் வேதனை |
'மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2022' என்ற குறும்பட திருவிழாவில் இயக்குனர் வசந்தபாலன் பேசியதாவது: இந்த குறும்பட விழாவில் கலந்துகொண்ட ஐந்து குறும்படங்களை பார்த்த போது, இன்றைய இளைஞர்கள் டெக்னாலஜியை பயன்படுத்தி இயக்கனருக்கான திறமையை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்கள். இன்றைய படைப்பாளிகளுக்கு டெக்னாலஜி கதவுகள் அகலமாக திறந்தே இருக்கின்றன. அதனால் சாதாரண ஒரு கதையை கூட அழகாக எளிதாக படமாக்க முடிகிறது.
அதேசமயம் தமிழ் சினிமாவில் கதாசிரியர்களே இல்லை. தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம். குறும்படங்களால் இயக்குனர்கள் உருவாகின்றனர் ஆனால், எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவுக்குள் வரவே இல்லை. இனிமேல் கதாசிரியர்களிடம் கதையை பெற்று அதன் பின் நாயகர்களை தேடிச் செல்ல வேண்டும். இயக்குனர்களை போல எழுத்தாளர்களுக்கும் போட்டி வைத்து விருது தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.