மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர் 'செம்பருத்தி'. 1400 எபிசோடுகளை கடந்த இந்த தொடரின் க்ளைமாக்ஸ் காட்சி அண்மையில் பிரம்மாணடமாக படமாக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து சீரியலின் வெற்றி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் செம்பருத்தி சீரியலில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுமே கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது முக்கிய நடிகர்கள் அனைவரையும் குறித்து மேடையில் பேசப்பட்டது. ஆனால், வில்லியாக நடித்திருந்த வீஜே மவுனிகாவிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் வருத்தமடைந்த வீஜே மவுனிகா தனது இன்ஸ்டாவில் இதை குறிப்பிட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள ஸ்டோரியில், 'செம்பருத்தி தொடருக்காக எனது பெஸ்டை கொடுத்தேன். ஆனால், சேனல் எனக்கு அதை திருப்பி தரவில்லை. நீங்கள் செம்பருத்தி தொடரின் முதன்மை கதாபாத்திரங்களை கொண்டாடினீர்கள். ஆனால், என்னை ஏன் மதிக்கவில்லை?. என்னை ஏன் அழைக்கவில்லை?. எங்கே எனக்கான விருது?. நீங்கள் என்னை அசிங்கப்படுத்திவிட்டீர்கள். ஆனால், மக்கள் என்னை ஏற்றுக்கொண்டனர், கொண்டாடுகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது அன்பு வைத்திருக்கும் மக்களுக்கு நன்றி' என கூறியுள்ளார்.
வீஜே மவுனிகா செம்பருத்தி தொடரின் ஆரம்பம் முதல் முடிவு வரை நடித்து கொடுத்துள்ளார். அப்படியிருக்க ஒரு சீரியலின் வில்லி நடிகைக்கு எப்படி தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுக்காமல் போனது என பலரும் மவுனிகாவிற்கு ஆதரவாக கேள்வி கேட்டு வருகின்றனர்.




